மூன்று நாட்களில் 16 லட்சம் பேர் – ‘கோச்சடையான்’ சாதனை!!!


12th of March 2014
சென்னை::கடந்த 9ஆம் தேதி சூப்பர்ஸ்டார் நடித்துள்ள ‘கோச்சடையான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லரை இதுவரை பதினாறு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். நீண்ட நாட்கள் கழித்து வெளியாகும் ரஜினி படம் என்பதும் அதை அவரது மகள் சௌந்தர்யாவே இயக்கியுள்ளார் என்பதும் ஒரு காரணம்.

அதையும் தாண்டி அனிமேஷனில் ஒரு வரலாற்றுப்படமாக ‘கோச்சடையான்’ உருவாகியிருப்பதால், ரஜினியின் புதிய அவதாரம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கும் ஆவல் தான் இந்த மூன்று நாட்களில் இத்தனைபேரை இந்த ட்ரெய்லரை பார்க்க வைத்திருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் சூப்பர்ஹிட் என்பது ஃபேஸ்புக், ட்விட்டர்களில் வந்து குவியும் கமெண்ட்டுகளில் இருந்தே தெரிகிறது..  

Comments