மார்ச்-16ல் அல்லு அர்ஜுன் பட இசைவெளியீடு!!!

12th of March 2014
சென்னை::தெலுங்கு திரைப்பட உலக இளம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த, அல்லு அர்ஜுன் நடித்துவரும் படம் தான் ‘ரேஸ் குர்ரம்’. இந்தப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், ஷாம் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
 
சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்தப்படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பொதுவாக, தெலுங்கில், குடும்ப உறவுகளை மையமாக வைத்து, எடுக்கப்படுகின்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு.
 
அந்த வரிசையில் இந்த ‘ரேஸ் குர்ரம்’ படமும் ஒரு இடத்தை பிடிக்கும் என்பது உறுதி.   

Comments