31st of March 2014
சென்னை:டேவிட் தோல்விக்குப் பிறகு விக்ரம் நம்பியிருக்கும் ஓரே படம் ஷங்கரின் ‘ஐ’ மட்டும் தான். பல மாதங்களாக நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டது.
பெரிய பட்ஜெட் என்பதால் இதில் அவருக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ‘ஐ’ படம் ரிலீசுக்குப் பிறகு தான் புதிய படங்களை கமிட் செய்வது என்ற திட்டத்தில் இருக்கும் விக்ரம், அதோடு தனது சம்பளத்தையும் ரூ.15 கோடியாக உயர்த்த முடிவு செய்துள்ளாராம்.
என்னதான் விக்ரம் ‘ஐ’ படத்தை நம்பியிருந்தாலும் அவர் மீது யாரும் நம்பிக்கை வைக்கத் தயாராக இல்லை. இதனால் புதிதாக அவரிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்கள் அவரின் சம்பளத்தைக் கேட்டு காத தூரம் ஓடுகிறார்கள். இந்நிலையில் தான் ‘கோலிசோடா’ டைரக்டர் விஜய் மில்டன் விக்ரமிடம் ஒரு கதையைச் சொல்லி ஹீரோவாக கமிட் செய்யப் போயிருக்கிறார்.
விஜய் மில்டன் சொன்ன கதையெல்லாம் பிடித்து விட்டது. ஆனால் விக்ரமின் சம்பளத்தைக் கேட்ட விஜய் மில்டன் அரண்டு விட்டார். அப்படி எவ்வளவு கேட்டார்? அதிகமில்ல ஜி ஜஸ்ட் 15 கோடி குடுங்க போதும், உடனே கால்ஷீட் தர்றேன் என்றாராம்.
உங்க சம்பளத்துல நான் இன்னும் கோலி சோடாவோட நாலு பார்ட்டுகள் எடுத்து முடிச்சிடுவேன்” என்று நக்கலாக சொல்லிவிட்டு வந்தாராம் மில்டன்.
Comments
Post a Comment