டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆரின் 'ஆயிரத்தில் ஒருவன்' 14ஆம் தேதி ரிலீஸ்!!!

11th of March 2014
சென்னை::தமிழகத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரும், இன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ஜோடியாக நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில் பழையப் படங்களை, தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றும் முறை அதிகரித்ததையடுத்து, இப்படத்தையும் அம்முறையில் மாற்றம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் டிஜிட்டல் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது..

Comments