23rd of March 2014
சென்னை::சோதனையான காலகட்டத்தில்தான் இருக்கிறார் வடிவேலு. இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் பிறகு ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ என்ற படத்தில் ஹீரோவாக இரண்டு வேடங்களில் நடித்து முடித்துவிட்டார் வடிவேலு. படத்தை யுவராஜா என்பவர் இயக்கியுள்ளார்.
தனது ரீ-எண்ட்ரி படம் மெகா ஹிட்டாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காட்சியிலும் பார்த்து பார்த்து கவனமாக நடித்துள்ளாராம் வடிவேலு. ஏற்கனவே தான் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை விடவும் இப்படம் பெரிய வசூல் சாதனை புரியும் என்று முழு திருப்தியில் இருக்கிறாராம் வடிவேலு.
கிட்டத்தட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை முடித்துவிட்டதால் அடுத்தவாரம் படத்தை தணிக்கை சான்றிதழுக்காக அனுப்ப இருக்கிறார்கள். தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் தேதி இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த இருக்கும் வடிவேல் அடுத்த பத்து நாட்களிலேயே அதாவது ஏப்ரல் 11ஆம் தேதியே படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
நீண்ட நாட்கள் கழித்து வடிவேலுவின் படம் வெளியாவதால் வரவேற்பு நன்றாகத்தான் இருக்கும்..

Comments
Post a Comment