31st of March 2014
சென்னை::கமல் ஒரு கவிதை பிரியர் என்பது நமக்கு தெரியும். சொல்லப்போனால் அவர் பேசுவதே கூட கவிதை மாதிரி அழகாக இருக்கும். அப்படி தனக்கு தோன்றிய தருணங்களில் எல்லாம் தான் எழுதிவைத்த 100 கவிதைகளை ஒரு புத்தகமாக வெளியிட இருக்கிறார் கமல்.
தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தில் பிஸியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது கவிதை புத்தகத்தை வெளியிட தீர்மானித்துள்ளாராம் கமல். இந்தவிழாவில் சினிமா பிரபலங்களை அழைப்பதை தவிர்த்து, தென்னிந்தியாவில் உள்ள இலக்கிய எழுத்தாளர்கள் பலரையும் அழைக்கவும் முடிவு செய்திருக்கிறாராம் கமல்.
இன்னொரு பக்கம் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் வேலைகளை முடித்துவிட்டாலும் கூட எப்போது ரிலீஸ் என இன்னும் ஒரு சிறு தகவலை கூட கமல் கசியவிடவில்லை.. ரிலீஸை ஏன் தள்ளிப்போட்டுவருகிறார் என்பதுகூட ரசிகர்களுக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. சீக்கிரமே கமலிடம் இருந்து நல்ல செய்தி வரும் என நம்புவோம்....
Comments
Post a Comment