சென்னையில் 100 நாள்களை நிறைவு செய்த த்ரிஷ்யம்!!!!

30th of March 2014
சென்னை::வரலாற்று சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு மலையாளப் படம் சென்னையில் அதுவும் ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகளில் தொடர்ச்சியாக 100 நாள்கள் ஓடியுள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கிய மோகன்லாலின் த்ரிஷ்யம் வெளியிட்ட அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வரவேற்புடன் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.

கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் படம் அமோக வரவேற்பை பெற்றது. 
தமிழ்ப் படங்கள் 100 நாள்கள் ஓடுவதே கடினமாகியிருக்கும் இந்தக் காலத்தில் மலையாளப் படம் ஒன்று 100 நாள்களை கடந்திருப்பது ஆச்சரியமான அதிசயம். 
 
உத்தம வில்லன் முடிந்ததும் திரிஷ்யம் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்கயிருப்பது குறிப்பிடத்தக்கது...
 

Comments