1st of February 2014சென்னை::லிங்குசாமியின் டைரக்ஷனில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் ஷூட்டிங்
மும்பையில் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் சத்தமே இல்லாமல் ஒரு
குத்துப்பாட்டை படமாக்கி விட்டார் லிங்குசாமி. சூர்யாவுடன் ஆடியிருப்பர்
பாலிவுட் சூப்பர் குத்தாட்ட நடிகை ஸகாரியா.
இந்த ஸகாரியா தமிழுக்கு
புதிதில்லை பல ஆண்டுகளுக்கு முன்பே தலைநகரம் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட
வைத்தார் சுந்தர்.சி. அதன் பிறகு இந்திப் பக்கம் போனவர் அங்கு குத்தாட்ட
நடிகையானார். ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு 50 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்.
இம்ரான்கானுடன் இவர் நடித்த கோக் விளம்பரம் ஹிட் அடிக்க பாலிவுட்டின் கவர்ச்சி ஆட்ட நாயகியானார். மியூசிக் ஆல்பங்கள், ஸ்டேஜ் ஷோக்கள் என ஸகாரியா ரொம்ப பிசி.
இம்ரான்கானுடன் இவர் நடித்த கோக் விளம்பரம் ஹிட் அடிக்க பாலிவுட்டின் கவர்ச்சி ஆட்ட நாயகியானார். மியூசிக் ஆல்பங்கள், ஸ்டேஜ் ஷோக்கள் என ஸகாரியா ரொம்ப பிசி.
இப்போது
பல ஆண்டுகளுக்குப் பிறகு லிங்குசாமி சூர்யாவுடன் ஸகாரியாவை ஆட வைத்து
ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவுடன் தான்
எடுத்துக் கொண்ட படத்தை தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கும் ஸகாரியா.
"சூர்யா அற்புதமாக ஆடுகிறார். நல்ல மனிதர் தொடர்ந்து தமிழ் படங்களில் ஆட
ஆர்வமாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.::
Comments
Post a Comment