20th of February 2014
சென்னை::அஞ்சான் படத்தில் இயக்குனர் லிங்குசாமி கேட்டுக் கொண்டதால் ஒரு பாடலை சூர்யா தனது சொந்தக் குரலில் பாட உள்ளார். அஞ்சான் படம் மும்பையில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. சமந்தா ஹீரோயின். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசை. திருப்பதி பிரதர்ஸ் படத்தை தயாரிக்கிறது.
மனோஜ் பாஜ்பாய், வித்யுத் ஜம்வால் போன்றவர்களும் நடித்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தை இந்தியிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர். சூர்யா விளம்பரப் பாடல் ஒன்றை ஏற்கனவே தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார். அதனால் இந்தப் படத்தில் ஒரு பாடலை அவர் பாடினால் நன்றாக இருக்கும் என்பது லிங்குசாமியின் எண்ணம். சூர்யாவும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.
Comments
Post a Comment