20th of February 2014
சென்னை::மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், கண்ணன் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடிக்கும் புது படம் 'ஒருஊர்ல ரெண்டுராஜா'. இதில் ஒரு ராஜாவாக விமலும், மற்றொரு ராஜாவாக சூரியும் நடிக்கின்றனர். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.
நாடோடிகள், சிந்துசமவெளி, ஆடுபுலி, பட்டத்துயானை போன்ற பல படங்களை தயாரித்த க்ளோபல் எண்டெர்யின்மெண்ட் நிறுவனத்தின் எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் புதிய படம் 'ஒருஊர்ல ரெண்டுராஜா'. இப்படத்தின் விமல் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியா நாந்த் நடிக்க, சூரி, நாசர், தம்பி ராமையா, சிங்கமுத்து, சாஷா, சுருதி ரெட்டி, அனுபாமா, சுப்பிரமணியம், ஜோஸ்னா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயிலில் நடக்கும் எதார்த்தமான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. முதல் பாதி வரை ரயிலிலும், இரண்டாம் பாதி கார் பயணம், ஆக்ஷம், காமெடி என கமர்ஷியலான பயணமாக இருக்கும். விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரின் நோக்கம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதை மிக ஜனரஞ்சகமான முறையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று, இப்படத்தின் முதல் செய்தியை இயக்குநர் ஆர்.கண்ணன் தெரிவித்தார்.
ஜெயம் கொந்தான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை போன்ற படங்களை இயக்கிய கண்ணன் இயக்கும் 5வது படம் 'ஒருஊர்ல ரெண்டுராஜா' ஆகும்.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டண்ட் சிவா சண்டைப்பயிற்சி அமைக்க, சூர்யா படத்தொகுப்பு செய்கிறார். விதேஷ் கலையை நிர்மாணிக்க, யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஏவிஎம் ஸ்டூடியோவில் தொடங்கியது. தொடர்ந்து ஒரே ஷெட்யூலாக படப்பிடிப்பு நடைபெறும் இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயன்ப்பன் தெரிவித்தார்.

Comments
Post a Comment