7th of February 2014சென்னை::சில தினங்களுக்கு முன் காளகஸ்தி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. கடவுளை தரிசனம் செய்ய வருகைதந்த பக்தர்கள் அங்கே வந்த காஜலை பார்த்து ஆச்சர்யப்பட்டு நின்றுவிட்டார்கள். ஆம்.. தன்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் புடைசூழ கோவிலுக்கு வந்தார் காஜல் அகர்வால்.
ராகு மற்றும் கேதுவை வழிபட வந்த காஜல் அகர்வால சிறப்பு தரிசனத்தை முடித்ததோடு அங்கு வந்த பக்தர்களிடம் கைகுலுக்கி அவர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். சமீபத்தில் நல்லபடியாக நடந்து முடிந்த தனது தங்கையின் திருமணத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தத்தான், காஜல் காளகஸ்திக்கு வந்திருந்ததாக சொல்லப்படுகிறது..
Comments
Post a Comment