யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிமாக மாறுவதை கேட்டு இளையராஜா அதிர்ச்சி - இஸ்லாமியராக மாறினார் யுவன் சங்கர் ராஜா!!!!!!!!!!

10th of February 2014
சென்னை::
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்!!!!!!!

கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இசைஞானி இளையராஜாவின் மகனான இவர் அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். தற்போது அவர் அஞ்சான், சிப்பாய், வை ராஜா வை, தரமணி, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல்கள் வெளியாயின. மேலும் யுவன் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரவின. இது குறித்து யுவன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

என் முடிவை எனது குடும்பத்தார் ஆதரிக்கின்றனர். எனக்கும் என் தந்தைக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. எனக்கு 3வது முறையாக திருமணம் நடக்கவில்லை. அது பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா - ஜீவா தம்பதிக்கு கார்த் திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற மகன்களும், பவதாரணி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–
முஸ்லிம் ஆக மாறுவது என்பது திடீர் என எடுத்த முடிவு அல்ல. ஒன்றரை வருடமாக இஸ்லாம் பற்றிய புத்தகங்கள் படித்தேன். நிறைய ஆன்மீக அனுபவங்கள் கிடைத்தது. புனித குரானை படித்த பிறகு நிறைய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் எனக்கு விடை கிடைத்தது.
 
என் தந்தை இளையராஜாவிடம் முஸ்லிம் மதத்துக்கு மாறப்போகும் முடிவு பற்றி சொன்னேன். இதை கேட்டதும் ஆரம்பத்தில் அவர் அதிர்ச்சியானார். அதன் பிறகு என்னை அவர் புரிந்து கொண்டு எனது முடிவை ஏற்றுக் கொண்டார்.
 
முஸ்லிமாக மாறியதால் எனக்கும் இளையராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை.
முஸ்லிம் பெண்னை மணப்பதற்காக நான் முஸ்லிமாக மாறியதாக சொல்லப்படுவதிலும் உண்மை
 
நான் இஸ்லாத்தை பின்பற்றுவதற்காக பெருமைப்படுகிறேன்: யுவன்சங்கர் ராஜா!!!!!!!

இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா இஸ்லாம்
மதத்திற்கு மாறிவிட்டதாக  தகவல்கள் வெளியாயின. மேலும் யுவன் 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரவின.


இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள யுவன் சங்கர் ராஜா தான் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும், அதற்காக பெருமைப்படுவதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.. மேலும் மூன்றாவதாக யாரையும் திருமணம் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள அவர். குடும்பத்தினர்  அனைவரும் தனது முடிவை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.::
tamil matrimony_HOME_468x60.gif

Comments