3rd of February 2014
சென்னை::வருத்தப்படாத வாலிப சங்கம் வெற்றியை தொடர்ந்து ஸ்ரீதிவ்யாவுக்கு வரவேற்பு அதிகம்தான். ஆனால் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என, பிடிவாதம் பிடித்து வந்த ஸ்ரீதிவ்யாவிடம், இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தன்னுடைய திறமையும், நடிப்பும் முழுவதும் வெளிப்படும் விதத்தில் கதையசம்
கொண்ட படத்தில் நடிப்பது என உறுதியாக உள்ளார் ஸ்ரீதிவ்யா. அதனால்
ஹீரோன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களிலும்
நடித்தால் தான், தன் திறமையும் பளிச்சிடும் என்பதை உணர்ந்த ஸ்ரீதிவ்யா,
இப்போது, சில முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும், முயற்சி
எடுத்து வருகிறார்.
இதையடுத்து, கிரிக்கெட் வீரர் ஒருவரை, துரத்தி துரத்தி காதலிக்கும்
பெண்ணாக ஒரு படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் வந்ததும்
கோடம்பாக்கத்தில் என் அடையாளமே மாறி விடும் என, நம்பிக்கையுடன்
கூறிவருகிறார் ஸ்ரீதிவ்யா...
Comments
Post a Comment