6th of February 2014
சென்னை::சினிமாவைப்பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் சின்ன பட்ஜெட்டோ, பெரிய பட்ஜெட்டோ எதுவாக இருந்தாலும் இசையமைப்பவர்கள், ஹிட் கொடுத்து பெரிய இசையமைப்பாளரான பிறகு சின்ன பட்ஜெட் படங்கள் பக்கம் திரும்பியே பார்ப்பதில்லை. 30, 40 கோடியில் தயாராகும் படங்களுக்கு மட்டுமே இசையமைக்க நினைக்கிறார்கள். நல்ல கதை, நல்ல டைரக்டர்கள் என்பதெல்லாம் அதற்கு அப்பாற்பட்டு விடுகிறார்கள். பட்ஜெட்தான் முதலிடம் வகிக்கிறது.
இதைத்தான், சென்னையில் நடைபெற்ற தெகிடி படத்தில் ஆடியோ விழாவில் பேசினார் டைரக்டர் சீனுராமசாமி. அவர் பேசுகையில், பராசக்தி என்ற சிறிய படத்தில் அறிமுகமான சிவாஜிகணேசன் தான் பின்னர் மிகப்பெரிய நடிகரானார். அதேபோல் நான் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று என்ற சிறிய பட்ஜெட் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜயசேதுபதி இன்றைக்கு முன்னணி நடிகராகியிருக்கிறார்.
மேலும், இன்றைக்கு சின்ன பட்ஜெட் படங்களுக்கு வளர்ந்துவிட்ட இசையமைப்பாளர்கள் இசையமைப்பதில்லை. ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களை நான் இயக்குவது போன்ற 2 கோடி பட்ஜெட் கொண்ட படங்களுக்கு இசையமைக்க மாட்டார்கள். அப்படியே அவர் ஒத்துக்கொண்டாலும், இந்த பட்ஜெட்டில் அவருக்கு சம்பளம் கொடுக்க முடியாது. ஆனால் சம்பளத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் பெரிய இசையமைப்பாளர்களும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்க வேண்டும். அந்த நிலை சினிமாவில் உருவாக வேண்டும் என்று பேசினார்...

Comments
Post a Comment