ரஜினியை அசத்திய ‘கோலி சோடா’!!!

12th of February 2014சென்னை::கோலிசோடா’வுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்துக்கொண்டே போகிறது. சாதாரண ரசிகர்கள் முதல் சமந்தா, அனுஷ்கா என முன்னணி ஹீரோயின்கள் வரை படம் பார்த்த பலரும் பாராட்டித் தள்ளி விட்டார்கள். இப்போது ‘கோலி சோடா’வுக்கு எதிர்பாராத திசையிலிருந்து பாராட்டு தேடி வந்திருக்கிறது.
 
பாராட்டியது வேறு யாருமல்ல.. நம் சூப்பர்ஸ்டார் ரஜினியே தான். படம் பார்த்த ரஜினிக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் இவ்வளவு பேர் வந்துபோகும் மார்க்கெட்டில் இந்த சிறுவர்களை வைத்து விஜய் மிலடன் எப்படி படமாக்கினார் என்பதுதான். அந்த ஆச்சர்யம் விலகாமலேயே உடனே தயாரிப்பாளர் லிங்குசாமியையும் விஜய் மில்டனையும் தனது இல்லத்துக்கு அழைத்த ரஜினி விஜய்மிலடனை பாராட்டியதோடு அவரது அடுத்த படமும் இதுபோல் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 
வழக்கு எண் 18/9’, ‘கும்கி’ என திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் படங்களை அவ்வப்போது கவனித்து பாராட்டிவரும் ரஜினி, ‘கோலி சோடா’வை பார்த்துவிட்டு, திருப்பதி பிரதர்ஸை ஊக்கப்படுத்தும் விதமாக லிங்குசாமியிடம் இது போன்ற நல்ல படங்களை தேர்வு செய்யும் செயலை தொடர்ந்து செய்யுங்கள் என பாராட்டியும் உள்ளார். அரைமணி நேரம் நடந்த இந்த சந்திப்பாலும் சூப்பர்ஸ்டாரின் பாராட்டாலும் சந்தோஷத்தில் திளைக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.::::
tamil matrimony_HOME_468x60.gif
 
 
 
 

Comments