இளையராஜா சொன்னதை கேட்டிருக்க வேண்டும், ஆனால் கேட்கவில்லை – கவலையில் அப்புக்குட்டி!!!

21st of February 2014
சென்னை::சுசீந்திரன், தான் இயக்கிய அழகர்சாமியின் குதிரை படத்தில் அவரை குதிரைக்காரன் வேடத்தில் நடிக்க வைத்தார். கதைப்படி அது கதாநாயகன் வேடம் என்பதால் ஒரே படத்தில் ஓகோவென்று பேசப்பட்டார் அப்புக்குட்டி.
மேலும், அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தபோது, அப்புக்குட்டியைப்பார்த்து, இந்த கதைக்குத்தான் நீ நாயகன். உனக்கு பொருத்தமான கதை என்பதால் உன்னை கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால், இதையே மனதில் கொண்டு தொடர்ந்து நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் எனறு அடம் பிடிக்கக்கூடாது என்று அப்புக்குட்டிக்கு அன்பாக அட்வைஸ் செய்தார் இளையராஜா.
 
ஆனால், அப்போது அதற்கு தலையை ஆட்டிய அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை ஓரளவு பேசப்பட்டதால் தொடர்ந்து ஹீரோ வாய்ப்புகளாக தேடினார். அந்த சமயம்தான் மன்னாரு என்றொரு படம் கிடைத்தது. ஆனால் அது சொதப்பிய பிறகு இப்போது இனி ஹீரோ வேசமே வேண்டாம் என்று முடிவுக்கு வந்துள்ளார். குறிப்பாக குள்ளநரிக்கூட்டம் படத்தை இயக்கிய பாலாஜி இயக்கும் புதிய படத்தில் முழுநீள காமெடியனாக நடித்து வருகிறார்.
இந்த சமயத்தில் பழைய கதைகளை அசைபோடும் அப்புக்குட்டி, அன்றைக்கே இளையராஜா, ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காதே என்று சொன்னார்.  
நான்தான் கேட்கவில்லை. அதனால் ஹீரோ வேசத்துக்காக பல வருடங்களை வீணடித்து விட்டேன். அப்போதே காமெடியனாக மாறியிருந்தால் இப்போது மார்க்கெட்டில் எனக்கும் ஒரு இடம் கிடைத்திருக்கும் என்று பீல் பண்ணிக்கொண்டிருப்பவர், மூத்தோர் சொல் கேள் என்பது இப்போதுதான் எனக்கு உரைத்திருக்கிறது என்கிறார்.     
tamil matrimony_HOME_468x60.gif

Comments