18th of February 2014
சென்னை::கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா அடுத்ததாக ‘சிவப்பு’ என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். படமும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஹீரோவாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. இந்தப்படத்திற்கு ‘தலப்பாக்கட்டி’ என பெயர் வைத்துள்ளார்கள். இது மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தின் ரீமேக் ஆகும்.
ஹோட்டலையும் சமையலையும் வைத்து இரண்டுமணி நேரம் சினிமாவாக எடுக்கமுடியுமா?… முடியும் என மலையாளத்தில் அழகாக நிரூபித்துக் காட்டியிருந்தார் இயக்குனர் அன்வர் ரஷீத். அந்தப்படம்தான் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்து கடந்த வருடம் மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்த ‘உஸ்தாத் ஹோட்டல்’.
இந்தப்படத்தில் ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான நட்பையும் அதற்கிடையே அழகான ஒரு காதலையும் வைத்து சூப்பர்ஹிட் படமாக இயக்கியிருந்தார் அன்வர் ரஷீத். தமிழில் தாத்தாவாக ராஜ்கிரணும் பேரனாக விக்ரம்பிரபுவும் நடிக்கிறார்கள், சூரி, சார்லி, தம்பிராமையா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். கதாநாயகியாக நடிக்கிறார் நஸ்ரியா. மலையாளத்தில் இதே கேரக்டரில் நித்யா மேனன் நடித்திருந்தார்.
இங்கே தமிழுக்காக நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்ய சென்றபொழுது, “மலையாளத்தில் நித்யா மேனன் சிறப்பாக நடித்திருந்தாலும் அவர் வரும் காட்சிகள் குறைவாகத்தான் இருந்தது” என கூறி தயங்கி இருக்கிறார்.. ஆனால் சத்யசிவாவோ தமிழுக்காக தான் அந்த ஸ்க்ரிப்ட்டில் செய்திருக்கும் மாற்றங்களை கூறி அதில் கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளதையும் விளக்கியுள்ளார். அதன்பின்னரே நஸ்ரியா இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
மார்ச்-31ல் கோழிக்கோட்டில் ஆரம்பிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடக்க இருக்கிறது.::
Comments
Post a Comment