6th of February 2014
சென்னை::அவன் இவன் படத்தில் அறிமுகமானவர் ஜனனி அய்யர். அதன் பிறகு பாகன் என்ற படத்தில் நடித்தார். பாலா படத்தில் அறிமுமாகியும் பெரிய அளவுக்கு வாய்ப்புகள் வராதது ஜனனிக்கு பெரும் கவலையாக இருந்தது. இதனால் மலையாள சினிமாவுக்கு போனார். அது ஒர்க் அவுட்டாகி அங்கு ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் தெகிடி என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அசோக் செல்வன் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் பேசிய ஜனனி, தமிழில் நான் நடிக்காததால் தமிழ்நாட்டை விட்டே நான் போய்விட்டதாக செய்திகள் வருகிறது. மலையாள படங்களில் நடித்தாலும் தமிழ்நாட்டில் சென்னையில் தான் இருக்கிறேன். இப்போது தெகிடி படத்தில் மது என்ற கேரக்டரில் ஐடி பொண்ணாக நடித்துள்ளேன். இதுதவிர இன்னும் இரண்டு புதுப்படங்களில் நடித்து வருகிறேன். தொடர்ந்து தமிழ்ப்படங்களில் நடிப்பேன். என்னை அவ்வளவு எளிதில் தமிழ்நாட்டை விட்டு துரத்திவிட முடியாது என்று கூறினார். .

Comments
Post a Comment