5th of February 2014சென்னை::எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெகுவேகமாக வளர்ந்துவரும் ‘புறம்போக்கு’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் என மூன்று ஹீரோக்கள் இருந்தாலும் படத்தில் ஒரே ஒரு கதாநாயகி கார்த்திகா தான்.
குலுமணாலியில் கடும் பனியில் நடைபெற்ற இந்த நீண்ட முதற்கட்ட படப்பிடிப்பில் பலவிதமான அனுபவங்கள் தனக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் கார்த்திகா. குறிப்பாக ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் சேலஞ்சிங்காகவும் த்ரில்லாகவும் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார் கார்த்திகா.
படத்தை யூடிவி மோஷன் பிக்சர்ஸுடன், ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவை ஏகாம்பரம் கவனிக்க, படத்தொகுப்பு செய்ய இருக்கிறார் வி.டி.விஜயன். மேலும் ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப்படத்தில் பணியாற்றி வருகின்றனர்.
Comments
Post a Comment