7th of February 2014
சென்னை::நயன்தாரா காதல் சர்ச்சைகளில் இருந்து விடுபட்டு சினிமாவில் மீண்டும்
தீவிரமாக நடிக்க துவங்கியுள்ளார். அவர் நடித்த ‘ஆரம்பம்’, ‘ராஜா ராணி’
படங்கள் ஹிட்டாகியுள்ளன. தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் படம் வருகிறது.
நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு:–
இது கதிர்வேலன் காதல் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். பவித்ரா என்ற நடுத்தர குடும்பத்து பெண்ணாக வருகிறேன். ரொம்ப ரசித்து நடித்துள்ளேன்.
அனாமிகா படத்திலும் நடிக்கிறேன். இது இந்தியில் வந்த கஹானி படத்தின் ரீமேக் ஆக இருந்தாலும் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையே நான் தேர்வு செய்து நடிக்கிறேன் என்று சொல்ல முடியாது. எனக்கு காமெடி படங்களில் நடிக்க பிடிக்கும். அதே நேரம் காமெடி படங்களில் மட்டுமே நடித்தாலும் விரும்ப மாட்டார்கள். கதைக்கும் என் கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருந்தால் நடிக்க ஒப்புக் கொள்வேன்.
இந்தியில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். எனக்கு இந்தி படத்தில் நடிக்க விருப்பம் இல்லை. தென் இந்திய மொழி படங்களில் நடிப்பதே போதும்.
நான் நடித்த ‘ராஜா ராணி’, ‘பில்லா’, ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட பல படங்கள் எனக்கு பிடிக்கும். எனது வாழ்க்கையில் பல பிரச்சினைகள் நடந்துள்ளது. அதில் இருந்து நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். சினிமா நிறைய பணம் புகழை சம்பாதித்து கொடுக்கிறது. அது போல் பாடங்களையும் கற்று கொடுக்கிறது.
நான் திருமணம் பற்றி இப்போது சிந்திக்கவில்லை. பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். திருமணத்தை நான் தவிர்க்கவில்லை. அது நடக்கும் போது நன்றாகவே நடக்கும்.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.

Comments
Post a Comment