21st of February 2014சென்னை::ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்தாலும் வெற்றிப் படங்களில் நடித்துக்கொண்டே இருக்கிறார் நயன்தாரா. ராஜா ராணி, ஆரம்பம். இது கதிர்வேலன் காதல் என்று தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்கள். அடுத்ததாக கஹானி இந்திப் பட ரீமேக்கான நீ எங்கே என் அன்பே நாயகிக்கு முக்கியத்துவமுள்ள படம்.
இப்போது உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் அடுத்த படமான நண்பேண்டா படத்திலும் நயன்தான் நாயகி. இந்தப் படத்தில் நடிக்கவைக்க தயாரிப்பாளர் உதயநிதி நயனுக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வழங்கியிருப்பதாகவும் ஐம்பது லகரத்தை அட்வான்ஸாக கொடுத்துவிட்டதாகவும் கோடம்பாக்கத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன.
நண்பேண்டா படத்தில் நடிக்க இருந்தவர் காஜல் அகர்வால்தான். அவருக்கு அட்வான்ஸ் பணமும் கொடுத்துவிட்டார் உதயநிதி. ஆனால் இது கதிர்வேலன் காதல் படத்தில் நயனின் நடிப்பும் தனக்கும் அவருக்குமான ஜோடிப் பொருத்தமும் பிடித்துப் போகவே சூட்டோடு சூடாக அடுத்த படமான நண்பேண்டாவுக்கும் நயனையே ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.
காஜலுக்குக் கொடுத்த அட்வான்ஸ் தொகை என்ன ஆனது என்றுதானே கேட்கிறீர்கள்? உதயநிதி அதை இன்னும் திரும்பிப் பெறவில்லை. தன் அடுத்த படத்தில் காஜலை நடிக்கவைக்கும் திட்டத்தில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது..
Comments
Post a Comment