விஜய் பட யூனிட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த தீபிகா படுகோனே!!!

5th of February 2014
சென்னை::கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த ராணா படத்தில் தீபிகா படுகோனே கமிட்டாகயிருந்தபோது, இந்த படம் வெளியாகும் நேரத்தில் மனீஷா கொய்ராலா விட்டுச்சென்ற இடத்தை இவர் கைப்பற்றி விடுவார் என்றுதான் கருத்துகள் நிலவின. ஆனால், இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளோடு ரஜினிக்கு உடல்நலக்குறைவு எற்பட்டதால் முடக்கப்பட்டது.

இருப்பினும், ஏற்கனவே தீபிகாவுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்ததால், அவரை கோச்சடையான் அனிமேஷன் படத்துக்கு பயன்படுத்திக்கொண்டார் ரஜினி மகள் செளந்தர்யா. அதனால் ரஜினி படமே தீபிகாவுக்கு தமிழ் முதல் படமாக அமைந்தது. அதனால் அந்த பெயரை வைத்துக்கொண்டே தமிழில் புதிய படங்களில் கமிட்டாகலாம் என்று தீபிகா சில டைரக்டர்களிடம் கதை கேட்கத் தொடங்கினார். ஆனால், தென்னிந்தியாவில் உள்ள நடிகைகள் ஒரு கோடி இரண்டு கோடி அளவிலே சம்பளம் வாங்கிக்கொண்டிருக்க இவரோ, ஒரு நாளைக்கு ஒரு கோடியாவது தந்தால்தான் நான் நடிப்பேன் என்றார். அதைக்கேட்டு தலைசுற்றிப்போன படாதிபதிகள், இவர் நம்ம பட்ஜெட்டுக்குள் அடங்கமாட்டார் போலிருக்கே என்று அவரை கழட்டி விட்டனர். அதனால் திரும்பவும் பாலிவுட்டுக்கே சென்று விட்டார் தீபிகா படுகோனே.

இந்த நிலையில், சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்திற்கு சமீபத்தில் தீபிகாவை தொடர்பு கொண்டு பேசினார்களாம். அப்போதும், கதையைப்பற்றி ஒரு வார்த்தைகூட கேட்காமலேயே எனக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வேண்டும். எத்தனை நாளைக்கு என்னை நடிக்க வைப்பது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று காசையே குறி வைத்து பேசியிருக்கிறார்.

இதனால், அதைக்கேட்டு விஜய் உள்பட அனைவருமே அதிர்ச்சியடைந்து கிடக்கிறார்கள். அதையடுத்து இந்த விசயத்தை இப்போதைக்கு கொஞ்சம் ஆறப்போடுவோம். கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகு தீபிகா வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவெடுப்பேன் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். …          
tamil matrimony_HOME_468x60.gif

Comments