8th of February 2014
சென்னை::பழசிராஜாவுக்கு பிறகு 2 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் மம்மூட்டிக்கு தொடர்ந்து தேய்பிறைதான். அவர் உயிரைக்கொடுத்து நடிக்கிற அனைத்து படங்களுமே அவரை ஏமாற்றி வருகின்றன. ஆனால், மோகன்லால் நடித்த படங்களெல்லாமே ஹிட்தான். கடைசியாக அவர் நடித்த திருஷ்யம் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நேற்று பிப்ரவரி-7ந்தேதி மலையாளத்தில் மம்மூட்டி நடித்த பால்ய கால சகி என்ற படம் திரைக்கு வருகிறது. பெரும்பாலும் செண்டிமென்ட் கதைகளாகவே நடித்து வந்த மம்மூட்டி இந்த படத்தில் காமெடி, ஆக்ஷன் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை மம்மூட்டியைப்போலவே அவரது ரசிகர்களும் பெரிய அளவில் எதிர்பார்க்கிறார்களாம்.
மேலும், மோகன்லாலின் த்ருஷ்யம் படத்துக்கு அவரது ரசிகர்கள் பெரிய அளவில் கேரளா முழுக்க பப்ளிசிட்டிகளை முடுக்கி விட்டது போன்று, இப்போது மம்மூட்டியும் தனது ரசிகர்களை முடுக்க விட்டுள்ளார். பரபரப்பான விளம்பரங்களே படத்தின் பாதி வெறறியை தீர்மானித்து விடும் என்பதால், கடந்த சில தினங்களாக களத்தில் வரிந்து கட்டி நிற்கிறார்களாம் மம்மூட்டி ரசிகர்கள்.

Comments
Post a Comment