8th of February 2014
சென்னை::நடித்த படம் ஹிட்டடித்தால், அதை பெரிய அளவில் கொண்டாடுவதும், தோல்விஅடைந்தால் துவண்டு போவதும் இயல்பான விஷயம் தான். ஆனால், ப்ரியா ஆனந்த், இதில் மாறுபட்டவராக இருக்கிறார்.
வெற்றி, தோல்விகளை நினைத்து நான் ஒருபோதும், வருந்துவது இல்லை. என்னைப் பொறுத்தவரை, எப்போதும் கலகலப்பாக, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற சுபாவம். அதனால், படப்பிடிப்புகளில் ஒருசின்ன இடைவெளி கிடைத்தாலும், என் ரகளையை ஆரம்பித்து விடுவேன்.
தற்போது என்னுடன் நடிக்கும் அதர்வா, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக் என, அனைவருமே இளைஞர்கள் என்பதால், நேரம் போவதே தெரியாமல், அவர்களுடன் கல கலப்பாக இருக்கிறேன் என்கிறார், ப்ரியா ஆனந்த்.
Comments
Post a Comment