7th of February 2014சென்னை::துவண்டு கிடந்த சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்களை உசுப்பிவிட்டிருக்கிறது ‘கோலி சோடா’வின் வெற்றி. இந்த வருட ஆரம்பத்தில் மிக குறைவான முதலீட்டில் தயாராகி கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் வசூலித்துள்ளது கோலிசோடா. சொல்லப்போனால் இவ்வாறு நிகழ்வது தமிழ்சினிமாவில் இதுதான் முதல்முறை.
இது இந்தப்படத்தை நம்பிக்கையுடன் வாங்கி வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது. படம் பார்த்த் ரசிகர்களை மட்டும் இல்லாமல் வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அனைவரும் இப்போது மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
படத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இயக்குனர் விஜய் மில்டனின் திட்டமிடல் நன்கு தெரிந்தது.
அதனால் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கிறேன் என கிளம்புவோர்கள் நல்ல கதையுடனும் தெளிவான திட்டமிடலுடனும் இறங்கினால் மட்டுமே வெற்றி நிச்சயம் என்பதைத்தான் ‘கோலி சோடா’வின் வெற்றி நமக்கு உணர்த்துகிறது..
Comments
Post a Comment