ரசிகர்கள் அஞ்சான் படத்தில் இதுவரை பார்த்திராத அதிரடியான சமந்தாவை பார்க்கப்போகிறார்கள்!!!

9th of February 2014
சென்னை
::தமிழ் சினிமா ரசிகர்கள் அஞ்சான் படத்தில் இதுவரை பார்த்திராத அதிரடியான சமந்தாவை பார்க்கப்போகிறார்கள். முந்தைய தமிழ்ப்படங்களில் பச்சபுள்ளையாட்டம் பவ்யமாக வந்து சென்ற சமந்தா, இனி கோடம்பாக்கத்திலும் தனது கொடியை பரபரப்பாக பறக்க விட வேண்டும் என்ற வெறியுடன் களமிறங்கியிருப்பதால் தெலுங்கு படங்களுககு எவ்விதமும் குறையில்லாத வகையில் அதிரடியாக பிரவேசிக்கப்போகிறாராம்.

இதுபற்றி சமந்தா விடுத்துள்ள செய்தியில், தமிழில் நான் நடித்த பாணா காத்தாடியிலேயே ஓரளவு கிளாமர் கதவுகளை திறந்தேன். ஆனால், அதையடுத்து என்னை ஆந்திர சினிமாவே வாரி அணைத்துக்கொண்டதால், எனது மொத்த கவர்ச்சி சேவையும் தெலுங்கு ரசிகர்களுக்கே போய் விட்டது. அதனால், இனி தமிழ் ரசிகர்களையும் கவர்ச்சியால் கட்டிப்போடப் போகிறேன். அந்த வகையில், அஞ்சான் படத்தில் பெரிய அட்டாக் கொடுக்கப்போகிறேன். தற்போது புனேவுக்கு அருகே ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அந்த பாடலில் அதிரடியான நடனமாடியிருக்கிறேன்.

தமிழ் ரசிகர்களைப்பொறுத்தவரை இந்த பாடலை பெரிய அளவில் என்சாய் பண்ணுவார்கள். அந்த அளவுக்கு அற்புதமான நடன அசைவுகளை கொடுத்திருக்கிறேன். அதேபோல் போதும் என்கிற அளவுக்கு அளவான கிளாமரும் அந்த பாடலில் இடம்பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள சமந்தா, சூர்யாவுடன் நடித்து வரும் அஞ்சானும், விஜய்யுடன் நடிக்கும் புதிய படமும் தமிழில் தன்னை ரொம்ப உயரத்தில் உட்கார வைத்து விடும் என்ற பெரிய நம்பிக்கையும் வைத்துள்ளாராம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments