நான் யாரையும் ஏமாத்தல, என்னைத்தான் சிலர் ஏமாத்தியிருக்காங்க: பவர் ஸ்டார்!!!

17th of February 2014
சென்னை::
கோலிசோடா’ தயாரிப்பாளர் தன்னை ஏமாற்றிவிட்டதாக பவர்ஸ்டார் புகார் கூறியுள்ளார்.
 
இன்றைய சினிமா’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்த்து. இந்த விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம், கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் இசைத் தட்டை பவர் ஸ்டார் சீனிவாசன் வெளியிட, சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய பவர் ஸ்டார், “யாரும், யாரையும் ஏமாற்றக் கூடாது..” என்று தத்துவமெல்லாம் உதிர்த்துவிட்டு.. தனக்கே சமீபத்தில் இது மாதிரியான ஒரு அனுபவம் நிகழ்ந்ததாக கூறினார். ‘கோலிசோடா’ படத்தில் கோயம்பேடு பகுதியில் ஒரு ஷூட்டிங் நடப்பது போலவும், அதில் பவர் ஸ்டார் கலந்து கொண்டு ஆடுவது போலவும் காட்சிகள் வரும்.  “அந்தக் காட்சியில் நான்தான் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் மிக வற்புறுத்தி அழைத்தார்கள்.

6 நாட்கள் முதலில் கேட்டு, பின்பு 3 நாட்களிலேயே முழு பாடலையும் எடுத்து முடித்துவிட்டார்கள். நான் அந்த டான்ஸ் சீன்ல நடிச்சப்போ என் போட்டோவை வெளியிட்டு விளம்பரமெல்லாம் செஞ்சாங்க. ஆனா கடைசில படம் ரிலீஸாகி வெற்றிபெற்றதும், என் போட்டோவை போடவே இல்லை. அப்புறம்… இதுல நான் ஆடியதற்கு பேசிய பணத்தில் ஒரு பகுதியை மட்டுமே கொடுத்த தயாரிப்பாளர்கள்.. இன்னமும் பணப் பாக்கி வைச்சிருக்காங்க. இதனை கோட்டால் ‘பணத்தைத் தர முடியாது.

யார்கிட்ட வேண்ணாலும் போய்ச் சொல்லு’ன்னு சொல்றாங்க. எல்லாரும் என்னைத்தான் ஏமாத்துறவனா நினைக்குறாங்க. ஆனா நான் என் சொந்த உழைப்பில், கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தில்தான் இந்த அளவுக்கு முன்னேறியிருக்கேன். நான் யாரையும் ஏமாத்தலை. ஆனா எனக்கு நியாயமா சேர வேண்டிய பண பாக்கியை கொடுக்காமல் என்னைத்தான் சிலர் ஏமாத்தியிருக்காங்க..” என்றவர் கடைசியாகச் “ஏமாத்துறதுல எனக்கு அப்பாக்களா, இங்க நிறைய பேர் இருக்காங்க போலிருக்கு..” என்று பன்ச் டயலாக் ஒன்றை சொல்லி முடித்தார். ::      
tamil matrimony_HOME_468x60.gif

Comments