6th of February 2014
சென்னை::தலைப்பைப் பார்த்து எதுவும் தப்பா நினைச்சிக்காதீங்க…எல்லாம் படத்தோட விளம்பரம்தான் இது.
சென்னை::தலைப்பைப் பார்த்து எதுவும் தப்பா நினைச்சிக்காதீங்க…எல்லாம் படத்தோட விளம்பரம்தான் இது.
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா நடித்துள்ள ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படம் நாளை வெளிவர உள்ளது.
இப்படத்திற்காக தெருத் தெருவாக , ரிக்ஷாவில் கட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டருடன் விஜய் சேதுபதி ரிக்ஷா ஓட்டி படத்தை விளம்பரப்படுத்தினார்.
அந்த காலத்திலெல்லாம் ஒரு படம் வெளிவருகிறதென்றால், இருசக்கரம் உள்ள ஒரு வண்டியின் இருபுறமும் பெரிய விளம்பரப் பலகைகளை வைத்து விளம்பரப்படுத்துவார்கள். அதை ஒவ்வொரு ஊரிலும் தெருத் தெருவாக தள்ளிக் கொண்டு செல்வார்கள்.
இல்லையென்றால் மாட்டு வண்டியில் , மைக் செட் கட்டிக் கொண்டு அந்த படத்தைப் பற்றி பேசிப் பேசி விளம்பரப்படுத்துவார்கள்.
ஆனால், இப்போது தொலைக்காட்சி, ரேடியோக்களில்தான் கோடி கோடியாக கொடுத்து விளம்பரம் செய்கிறார்கள்.
பண்ணையாரும் பத்மினியும்’ குழுவினர் படத்தையும் வித்தியாசமாக எடுத்திருப்பதால் படத்தை விளம்பரப்படுத்துவதிலும் வித்தியாசமாக இந்த பழைய முறையை கொண்டு வந்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி, போராடி முன்னுக்கு வந்திருக்காரு…விளம்பரப்படுத்தறதோட நிறுத்திக்குங்கப்பா…..
Comments
Post a Comment