கோச்சடையானுடன் மோதுகிறார் தெனாலிராமன்!!!

5th of February 2014சென்னை::ஒரு காலத்தில் ரஜினி படம் வெளியாகிறது என்றால், அவர் படத்தை எதிர்த்து நிற்க துணிவில்லாமல் பல முன்னணி நடிகர்களின் படங்களே துண்டக்காணோம் துணியக்காணோம் என்று ஓடி ஒழிந்தன. ஆனால், கோச்சடையான் விசயத்தில் அது பொய்த்து விட்டது. காரணம், பொங்கலுக்கு அஜீத்தின் வீரமும், விஜய்யுடன் ஜில்லா படமும் வெளியாக இருக்கிற சேதி தெரிந்தே கோச்சடையானையும் இறக்கி விடப்போவதாக கூறினர்.

காரணம், ரஜினி படம் வரப்போவதால், விஜய், அஜீத் இருவரில் ஒருவரின் படம் பின்வாங்கி விடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் முன் வச்ச காலை பின் வைக்காமல், பொங்கலுக்கு களத்தில் இறங்கியே தீருவது என்பதில் உறுதியாக இருந்தனர். அதேசமயம் படத்தின் வேலைகளும் முடியாமல் இருந்ததால் கோச்சடையான் பின்வாங்கினார்.

இந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாதம் 11-ந்தேதி கோச்சடையானை வெளியிடப்போவதாக இப்போதே அறிவித்து விட்டனர். இதனால் சில சிறிய படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டபோதும், அதே தேதியில் வடிவேலுவின் ஜெகஜால புஜபல தெனாலிராமன் வெளியாகயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இப்படங்களின் வியாபாரம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, முக்கிய தியேட்டர்களை கைப்பற்றவும் மேற்படி பட நிறுவனங்கள் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்......           
tamil matrimony_HOME_468x60.gif

Comments