6th of February 2014
சென்னை::தேசிய விருது பெற்ற நடிகரான தனுஷ், ‘ராஞ்சனா’ என்ற படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகிலும் அறிமுகமானார்.
சென்னை::தேசிய விருது பெற்ற நடிகரான தனுஷ், ‘ராஞ்சனா’ என்ற படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகிலும் அறிமுகமானார்.
சென்ற ஆண்டு வெளிவந்த அந்த படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து, தனுஷுக்கு சென்ற ஆண்டிற்கான சிறந்த புதுமுக நடிகர் என்ற ஃபிலிம் பேர் விருதையும் பெற்றுத் தந்தது.
அந்த படத்திற்குப் பிறகு அடுத்து தனுஷ் நடிக்கும் இரண்டாவது ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது.
இந்த படத்தை ‘சீனிகம், பா’ போன்ற படங்களை இயக்கிய தமிழரான பால்கி இயக்குகிறார். அமிதாப் பச்சன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தனுஷும் ஹீரோவாக நடிக்கிறார். கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.
தனுஷை நடிக்க வைப்பதைப் பற்றி பால்கி கூறுகையில்,
தனுஷை நான் ரொம்ப நாளா பார்த்துக்கிட்டு வர்றேன். அவர் பார்க்கத்தான் சின்ன உருவமா தெரியறாரு. ஆனால், அவருக்குள்ள ஒரு பெரிய நடிகன் இருக்காரு.
எந்த மாதிரியான கேரக்டர்லயும் செட் ஆகிடுவாரு. அதுதான் தனுஷோட ப்ளஸ்,” என்கிறார் பால்கி.
படத்திற்கு பால்கியின் அபிமான இசையமைப்பாளரான இளையராஜா இசையமைக்கிறார். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த கூட்டணி அமிதாப்புடனும் இணையும் மூன்றாவது படம் இது.…..
Comments
Post a Comment