3rd of February 2014
சென்னை::மலையாளத்தில் மோகன்லால் நடித்த சூப்பர்ஹிட் படமான ‘த்ரிஷ்யம்’ இப்போது தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் கமல் நடிப்பதும், மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழில் இயக்குவதும் முடிவு செய்யப்பட்டுவிட்டது.

முதலில் இந்தப்படத்தில் ரஜினியை நடிக்கவைக்கலாமா என ஒரு பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. ரஜினியும் இந்தப்படத்தை ரசித்துப் பார்த்துள்ளார். ஆனால் சில காட்சிகளில் தான் நடித்தால் அதை தனது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் அவருக்கு இருந்ததுஎன்கிறார் ஜீத்து ஜோசப்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாட்டிலேயே நடத்துவதற்காக லொக்கேசன் தேடிக்கொண்டு இருக்கும் ஜித்து ஜோசப் படத்தின் வசனங்களில் கமலின் உதவியைத்தான் நாடப்போகிறேன் என்கிறார். மேலும் கமலுடன் சேர்ந்து தமிழுக்கு ஏற்றமாதிரி இந்த கதையில் சில மாற்றங்களை செய்த பின்னரே படப்பிடிப்புக்கு கிளம்புவோம் என்கிற ஜீத்து ஜோசப், வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்..
Comments
Post a Comment