நான் தமிழ்நாட்டு பொண்ணு எதுக்காக கேரளாவுக்கு ஓடணும்: ஜனனி அய்யர்!!!

18th of February 2014
சென்னை::பாலாவின், 'அவன் இவன்' படத்தில் அறிமுகமானவர் ஜனனி அய்யருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லை. பாகன் படத்தில் மட்டும் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்தார். திடீரென மலையாள வாய்ப்புகள் குவிய இப்போது மல்லுவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கொச்சியில் வீடு வாங்கி செட்டிலாகிவிட்டதாகவும் தகவல். தற்போது தெகிடி படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார். "நான் சென்னையில் பிறந்து வளர்ந்த பொண்ணு நான் ஏன் கேரளாவுல செட்டிலாகணும்" என்று கேட்கிறார் ஜனனி.

அவர் மேலும் கூறியதாவது: நான் மயிலாப்பூர்ல பொறந்து வளர்ந்த பொண்ணு. அரண்மணை மாதிரி இங்க வீடு இருக்கு. பீச்சுல வாக்கிங். வெள்ளிக்கிழமை கபாலீஸ்வரர் தரிசனம், அருபத்து மூவர் உலா, தெப்பத் திருவிழா, கலகலன்னு இருக்குற கடைவீதி. இது மாதிரி சொர்க்கம் உலகத்துல எங்கேயுமே கிடையாதுங்க. அப்படி இருக்கும்போது நான் எதுக்கு கேரளாவுல செட்டிலாகணும். நாலு படத்தில் நடிக்கிறேன். ஏன் நடிக்கிறேன் அங்கு சான்ஸ் கிடைக்குது. இங்க சான்ஸ் இல்லை. சென்னையிலேருந்து கேரளா போறது ஒண்ணும் சிரமம் இல்லை.

தெகிடி மூலம் நல்ல ரீ என்ட்ரி கிடைச்சா தமிழ் படத்துக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன். இன்னும் இரண்டு மூன்று படங்கள் பேசிக்கிட்டிருக்கேன். அதுவும் முடிவாயிடும். மலையாத்துல எல்லாமே பெர்மான்ஸ் ஸ்கோப் படங்கள்தான். தமிழ்ல கொஞ்சம் கிளாமரோட கமர்ஷியல் படங்கள்ல நடிக்கலாமுன்னு இருக்கேன். ரசிகர்கள் மனசுல என்ன இருக்குன்னு யாருக்குத் தெரியும். என்கிறார் ஜனனி.
      
tamil matrimony_HOME_468x60.gif

Comments