சிம்புவுக்கு புகைச்சல் தர தெலுங்கு ஹீரோவுக்கு ஹன்சிகா வலை!!!

3rd of February 2014
சென்னை::
சிம்பு-ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டு சமீபத்தில் அது முடிவுக்கு வந்தது. இப்போது தனது மாஜி காதலி நயன்தாராவுடன் சிம்பு நடித்து வருகிறார். ஹன்சிகாவை கடுப்பேற்றத்தான் நயன்தாராவுடன் சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கில் விஷ்ணு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார்.
 
சிம்புவின் நெருங்கிய நண்பர், விஷ்ணு. இதனால் பதிலுக்கு பதிலாக சிம்புவை கடுப்பேற்றும் விதமாக விஷ்ணுவை பாராட்டி தள்ளியிருக்கிறார் ஹன்சிகா. சினிமாவில் இருக்கும் தனது ஒரே ஆண் நண்பர் என்றும் விஷ்ணுவை குறிப்பிட்டுள்ளார் ஹன்சிகா.இது பற்றி ஹன்சிகா கூறியது:
 
தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் நல்ல வேடங்கள் அமைகின்றன. அதனால் எதையும் தவிர்ப்பதில்லை. கால்ஷீட் இல்லாத பட்சத்தில்தான் அதுபோன்ற படங்களை ஏற்க முடியாமல் போகிறது. டோலிவுட்டில் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் எனக்கு நண்பர் என்று பார்த்தால் விஷ்ணு மட்டும்தான்.
 
தேனிக்கய்னா ரெடி படத்தில் விஷ்ணுவுடன் நடித்தேன் மீண்டும் பாண்டவலு பாண்டவலு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறேன். திரையுலகில் எனக்கிருக்கும் ஒரே நண்பர் இவர்தான். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தாலே ஸ்பாட் கலகலப்பாகிவிடும். பாலிவுட்டில் மல்டி ஸ்டார் படங்கள் நிறைய வருகிறது. ஆனால் அதில் பல ஹீரோக்கள் நடித்தாலும் குறிப்பிட்ட ஒரு ஹீரோவுக்குதான் நிறைய காட்சிகள் இருக்கும். தற்போது நடிக்கும் பாண்டவலு பாண்டவலு படத்திலும் பெரிய ஸ்டார்கள் நடிக்கிறார்கள். ஆனால் இதில் எல்லோருக்கும் சமஅளவு நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானவை. பொதுவாகவே நான் ரொம்ப ஜாலியான டைப் அதுபோன்ற வேடங்கள் அமைந்தால் நடிப்பும் இயல்பாகவே அமைந்துவிடுகிறது.இவ்வாறு ஹன்சிகா கூறினார்...
tamil matrimony_HOME_468x60.gif

Comments