6th of February 2014
சென்னை::விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் கமல். இந்த நேரத்தில் அடுத்தபடியாக அடுத்து ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் மார்ச் மாதம் முதல் அவர் நடிக்கயிருக்கும் உத்தமவில்லன் பட வேலைகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதை, திரைக்கதையை கமல் எழுத, வசனத்தை கிரேஸிமோகன் எழுதுவதால், கதை விவாதத்திலும் அடிக்கடி கலந்து கொண்டு வருகிறார் கமல்.
மேலும், கமலுடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் டைரக்டர் கே.பாலசந்தர் நடிப்பதால், அவருக்கான வேடத்தை பெரிய அளவில் மெருகேற்றிக்கொண்டிருக்கிறாராம் கமல். அவர் தனது குருநாதர் என்பது மட்டுமின்றி, அவருக்குள் இருக்கிற நடிப்பு கலைஞனை முழுசாக வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள கமல், இந்த படம் மூலம் எனது நீண்ட நாளைய ஆசை நிறைவேறப்போகிறது என்றும் கூறியுள்ளார்.
அதாவது, கே.பாலசந்தர் பிசியாக படங்களை இயக்கி வந்தபோதே, சில படங்களில் நல்ல கேரக்டர்கள் வரும்போது, அதில் நீங்கள் நடியுங்கள் என்று கமல் கேட்டுக்கொள்வாராம். ஆனால், நடிப்பில் ஆசையில்லாமல் இருந்த பாலசந்தர் மறுத்து விடுவாராம். கடைசியாக அவர் இயக்கிய பொய் படத்தில்தான் ஒரு சிறிய ரோலில் தோன்றினார் பாலசந்தர். அதன்பிறகு ரெட்டச்சுழி என்ற படத்திலும் பாரதிராஜாவுடன் இணைந்து நடித்தார்.
இருப்பினும், பாலசந்தரை அவருக்கு பொருத்தமான, அவருக்குள் இருக்கிற நடிகனை வெளியே கொண்டு வரக்கூடிய ஒரு நல்ல வேடத்தில் நடிக்க வைத்துப்பார்க்க வேண்டும் என்ற, உத்தமவில்லன் படத்தில் அவரை வற்புறுத்தி நடிக்க வைக்கிறாராம். உங்களுக்காக இல்லையென்றாலும் எனது ஆசைக்காக கட்டாயம் நடிக்க வேண்டும் என்று கமல் கேட்டுக்கொண்டதையடுத்து, சிஷ்யனின் ஆசையை நிறைவேற்றவே அரிதாரம் பூச சம்மதித்துள்ளாராம் கே.பாலசந்தர்...

Comments
Post a Comment