10th of February 2014சென்னை::நாணயம்’ படத்துக்குப் பிறகு சிபிராஜ் நீண்ட இடைவெளிவிட்டு நடிக்கும் படம் தான் ‘நாய்கள் ஜாக்கிரதை’. லீ’, ‘நாணயம்’ படங்களுக்கு பிறகு நல்ல கதை அமையாததால் நீண்ட இடைவெளிவிட்ட சிபிராஜ், இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
படத்திற்கு இப்படி பெயர் வைத்திருப்பதற்கு காரணம் இருக்கிறது. இதில் கதாநாயகனுக்கு இணையான கேரக்டரில் பயிற்சி பெற்ற ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த ராணுவ புலனாய்வு நாய் ஒன்றும் நடிக்கிறது. சிவா என்கிற இந்த நாய் இன்றுமுதல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறது.
கோவை, பாலக்காடு பகுதிகளில் படப்படிப்பை நடத்தியவர்கள் இப்போது எங்கே படப்பிடிப்பு நடத்திவருகிறார்கள் தெரியுமா.? ஊட்டிக்கு பக்கத்தில் சமீபத்தில் மக்களை பயமுறுத்திய புலி ஒன்றை சுட்டுக்கொன்றார்களே.., அந்த இடத்தில்.. தற்போது அங்கே சிறுத்தை ஒன்று குட்டிகளுடன் உலாவருவதாகவும் கூறப்படுகிறது.. இந்தமாத இறுதிக்குள் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிராஜுக்கு ஜோடியாக ‘வெளுத்துக்கட்டு’ ‘சுன்டாட்டம்’ அருந்ததி நடிக்கிறார். ஏற்கனவே சிபிராஜ் நடித்த ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். தரண்குமார் இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார். சிபிராஜ் நடித்த ‘லீ’ படத்தை தயாரித்த சத்யராஜின் நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறது.
Comments
Post a Comment