திருமண வாழ்க்கை சலித்தது நடிக்க வந்தார் ஜெனிலியா!!!

 5th of February 2014
சென்னை::திருமண வாழ்க்கை சலித்ததால் மீண்டும் நடிக்க வந்தார் ஜெனிலியா. பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. தெலுங்கிலும் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருந்தார். பிஸியாக நடித்துக்கொண்டிருந்த தருணத்தில் திடீரென்று பாலிவுட் ஹீரோவும், காதல னுமான ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். எந்த உரசலும், பிசகலும் இல்லாமல் இணைந்த பாலிவுட் ஜோடி இதுதான் என்று பாராட்டுபெற்றனர். யார் கண்பட்டதோ இப்போது ஜெனிலியாவுக்கு திருமண வாழ்க்கை சலித்துவிட்டது.

சினிமா டாம்பீகம் அவரை கவர்ந்திழுத்துக்கொண்டிருக்கிறது. அடக்கி வைத்திருந்த நடிப்பாசை சல்மான் கானின் ஜெய் ஹோ மூலம் வெளிப்பட்டது. அந்த படத்தில் சிறிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும். இதுதான் சான்ஸ் என்று ஓகே சொல்லிவிட்டார். இந்த ஒரு படம்தான் நடிப்பேன் என்று தாஜா செய்து ரித்தேஷிடம் சம்மதம் பெற்றார். ஷூட்டிங் பளபளப்பு ஜெனிலியாவை மீண்டும் கவ்விக்கொண்டது. தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் சல்மான்கானின் தம்பியும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கான் தான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற படத்தில் ஜெனிலியாவுக்கு 2வது நாயகியாக நடிக்க வாய்ப்பு தர முடிவு செய்துள்ளார். ஏற்கனவே ஹீரோயினாக சோனம் கபூர் நடிக்க ஒப்பந்தம் ஆனாலும் வாய்ப்பை தவறவிட மனமில்லாமல் ஜெனிலியா ஓகே சொல்லி இருக்கிறாராம்.           
tamil matrimony_HOME_468x60.gif

Comments