6th of February 2014
சென்னை::கமல்ஹாசன் , ‘விஸ்வரூபம் 2’ படத்திற்குப் பிறகு நடிக்கவிருக்கும் படம் ‘உத்தம வில்லன்’.
சென்னை::கமல்ஹாசன் , ‘விஸ்வரூபம் 2’ படத்திற்குப் பிறகு நடிக்கவிருக்கும் படம் ‘உத்தம வில்லன்’.
இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். கமலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.
இதனிடையே படத்தின் இசையமைப்பாளராக ஏற்கனெவே ஒப்பந்தம் செய்யப்பட்ட யுவன் ஷங்கர் ராஜா படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவருக்குப் பதிலாக ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசையமைத்து வரும் ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
விஸ்வரூபம் 2’ படத்திற்காக ஜிப்ரான் வேலை செய்த விதம் கமலை கவர்ந்து விட்டதாகவும் அதனால்தான் அவர் ஜிப்ரானை இசையமைப்பாளராக போடச் சொன்னதாகவும் சொல்கிறார்கள்.
உத்தம வில்லன்’ படத்தில் தன்னை இசையமைப்பாளராக பணியமர்த்தியதற்காக சில மாதங்களுக்கு முன் யுவன் ஷங்கர் ராஜா கமல்ஹாசனை சென்று வாழ்த்து பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
கமல் படத்திற்கு இசையமைக்கப் போவது குறித்து அவரும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
அதற்குள் என்ன நடந்தது எனத் தெரியவில்லை.…..
Comments
Post a Comment