6th of February 2014
சென்னை::தமிழ்சினிமாவில் டைட்டில் பஞ்சம் அநியாயத்துக்கு தலை விரித்து ஆடுகிறது. அதனால் தான் வாயில் நுழைகிற வார்த்தைகளை எல்லாம் டைட்டிலாக வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
இன்னும் சிலரோ பிரபலமானவர்களின் பெயரை படத்துக்கு டைட்டிலாக வைத்து ஓசியில் பப்ளிசிட்டி தேடுவதோடு மட்டுமில்லாமல் அதன் மூலம் காசு பார்க்கவும் கிளம்பி விடுகிறார்கள்.
ஏற்கனவே தனுஷ் 5-ஆம் வகுப்பு, சரவணன் என்கிற சூர்யா என்று இரண்டு படங்கள் தயாராகி வரும் நிலையில் எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்கிறார் நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார்.
வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ் என்ற கம்பெனியில் ஆரம்பித்திருக்கிறார் வனிதா. இந்தப்படத்துக்கு டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் தான் டைரக்டராம்.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கும் அவர் அதற்காக இன்று கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பி கேட்டு வந்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
நான் ‘வனிதா பிலிம் புரொடக்ஷன்’ கம்பெனி சார்பில் புதுப்படம் தயாரிக்கிறேன். இந்த படத்துக்கு எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என்று டைட்டில் வைத்துள்ளேன்.
இந்த நால்வரும் சினிமாவுக்கு கடவுள் போன்றவர்கள். எனவேதான் இந்த டைட்டிலில் படம் எடுக்கிறேன்.
இதில் நான்கு பேர் ஹீரோக்களாக நடிக்கின்றனர். பிரபலமானவர்கள் மற்றும் புதுமுகங்களும் நடிக்க உள்ளனர் என்றார்.
காசு சம்பாதிக்க எப்படியெல்லாம் பிரபலங்களோட பேரை யூஸ் பண்ணிக்கிறாங்க…
Comments
Post a Comment