டி.ராஜேந்தர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி: நடிகர்-நடிகைகள் வாழ்த்து!

11th of February 2014
சென்னை::
டைரக்டர் டி.ராஜேந்தரின் மகள் இலக்கியா எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர். இவருக்கும் அபிலாஷ் சிங்கப்பூருக்கும் சென்னையில் உள்ள 'லீலா பேலஸ்' நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் நடந்தது.

தி.மு.க.தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன், டாக்டர் அன்புமணி ராமதாஸ், 'தினத்தந்தி' இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மலேசிய இந்திய ஐக்கிய கட்சியின் தேசிய தலைவர் டத்தோ கே.எஸ்.நல்லா, புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், டி.ஆர்.பாலு எம்.பி., முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், பிரபு, 'விக்ரம்' பிரபு, 'ஜெயம்' ரவி, கார்த்தி, நடிகைகள் குஷ்பூ, மீனா, மும்தாஜ், பூர்ணிமா பாக்கியராஜ், டைரக்டர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, ஷங்கர், பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி, வசந்த், சேரன், விஜய், பாண்டிராஜ், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், செயலாளர்கள் ஞானவேல்ராஜா, டி.சிவா, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பட அதிபர்கள் எஸ்.தாணு, ஆர்.பி.சவுத்திரி, ஏ.எல்.அழகப்பன் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

அனைவரையும் டி.ராஜேந்தர், அவருடைய மனைவி உஷா ராஜேந்தர், மகன்கள் சிலம்பரசன், குறளரசன் ஆகியோர் வரவேற்றார்கள். ::
tamil matrimony_HOME_468x60.gif

Comments