13th of February 2014
சென்னை::தற்போது சிவகார்த்திகேயன், ஹன்ஷிகா ஜோடியாக நடித்துவரும் ‘மான் காராத்தே’ படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான திருக்குமரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் டீஸரை நாளை மறுநாள், அதாவது காதலர் தினத்தன்றும் படத்தின் ஆடியோவை மார்ச்-1ஆம் தேதியும் வெளியிட முடிவு செய்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரான எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்.

இதில் இன்னொரு ஆச்சர்யமாக படத்தை ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறாராம் மதன்.. அன்றைய தினம் தான் சூப்பர்ஸ்டாரின் ‘கோச்சடையான்’ வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியும் ‘கோச்சடையான்’ படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்களின் அடுத்த சாய்ஸ் நிச்சயம் சிவகார்த்திகேயன் தான்.. அதனால் சைடு கேப்பில் கவனமாக புகுந்து கிடா வெட்ட முடிவு செய்திருக்கிறார் மதன்..
Comments
Post a Comment