13th of February 2014
சென்னை::சிம்பு, ஹன்சிகா நடிக்கும் வாலு படம் இரண்டு வருடமாக தயாரிப்பில் இருக்கிறது. இயக்குனர் விஜய் சந்தரும் முட்டி மோதிப் பார்த்தும் படத்தை முடிக்க முடியவில்லை. சமீபத்தில் இரண்டு முறை ஐதராபாத்தில் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்தும் சிம்பு வந்தால் ஹன்சிகா வராமலும், ஹன்சிகா வந்தால் சிம்பு வராமலும் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி பெரும் கவலையில் இருக்கிறார். படத்தின் தாமத்திற்கு நான் காரணமில்லை என்று அவரவர் சொல்லிக் கொள்கிறார்கள். இப்போது ஹன்சிகா நான் காரணம் இல்லப்பா என்று தன் பங்குக்கு சொல்லிவிட்டார்
அவர் கூறியிருப்பதாவது: வாலு படத்துக்கு என்னோட பெஸ்ட்டை கொடுத்திருக்கேன். என்னால எந்தப் படமும் தாமதம் ஆகவில்லை. வாலு தாமத்துக்கு யார் காரணம் என்று தெரியாது. சமீபத்தில்கூட ஐதராபாத்தில் படப்பிடிப்பு வச்சிருக்கோம் வாங்க என்றார்கள். அடுத்த நொடியே அங்க போனேன். ஆனால் ஷூட்டிங் நடக்கல. அதுக்கு காரணம் எனக்குத் தெரியாது. எத்தனையோ முறை டைரக்டருக்கு போன் செய்து என்னோட கால்ஷீட் டேட் சும்மா இருக்கு வேணும்னா ஷூட்டிங் வையுங்கன்னு சொல்லியிருக்கேன். அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் அமைதியா இருக்கார். எனவே வாலு தாமத்திற்கு நான் எந்த விதத்திலும் காரணம் இல்லை என்கிறார் ஹன்சிகா.

Comments
Post a Comment