5th of February 2014சென்னை::சினிமாவில் மட்டும்தான் தோல்வி அடைந்தவர்களை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஓரம் கட்டி அழகு பார்ப்பதும் நடக்கும்.
ஒருவரால் பணம் வருகிறது, லாபம் கிடைக்கிறது என்றால் மட்டுமே அவர்களை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடும் உலகம் இது.
கடினமான நேரத்தில் கை தூக்கி விட்டவர்களைக் கூட தூக்கி தூர எறிந்த சம்பவங்கள் ‘துருவ நட்சத்திரம்’ படம் மூலமாக இயக்குனர்
கௌதம் மேனனக்கு கிடைத்தது.
ஒரு பக்கம் தோல்வி படங்கள், மறுபக்கம் பழைய பிசினஸ் பார்ட்னர்களின் வழக்கு என அல்லாடிக் கொண்டிருந்த கௌதமுக்கு சரியான நேரத்தில் கை கொடுத்திருக்கிறார் அஜித்.
அடுத்து அஜித் நடிக்கப் போகும் படம் கௌதம் மேனன் இயக்கத்தில்தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் குறிப்பிட்டுள்ளதாவது,
வீரம்’ படம் முடிஞ்சதுமே அஜித்தோட மனசுல மூணு டைரக்டர் இருந்தாங்க. ஆனால், அதுல நான் கிடையாது. சூர்யாவோட பண்றதா இருந்த ‘துருவ நட்சத்திரம்’ ட்ராப் ஆனது அவருக்குத் தெரியும். பிரச்சனைகள் போய்க்கிட்டிருக்குன்னும் தெரியும்.
ஒரு நாள், ‘கௌதம் பிரஷ்ஷா ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க. எல்லாத்தையும் பாஸிட்டிவ்வா மாமத்திடுவோம். கவலைப்படாதீங்கன்னு’ சொன்னார்.
பொதுவா நான் உனக்கு உதவுவேற்னு உணர்த்துற மாதிரி அஜித் நடந்துக்கவே மாட்டார். அவர் கேரக்டர் அப்படி,” என அஜித்தை மனதார பாராட்டியுள்ளார்...
Comments
Post a Comment