2nd of February 2014
சென்னை::பரோட்டா சூரியுடன் நடிக்க சிம்பு மறுப்பு தெரிவித்தார்.காமெடி நடிகர் சந்தானத்தை நகைச்சுவை நடிகராக ‘காதல் அழிவதில்லை‘ என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார் சிம்பு. இதையடுத்து இருவரும் நண்பர்களானார்கள். அடுத்தடுத்து தான் நடித்த படங்களிலும் சந்தானத்தை சிம்பு பயன்படுத்தினார். சந்தானம் தயாரித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா‘ என்ற படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்தார்.
தற்போது ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதில் பரோட்டா சூரியை காமெடியனாக நடிக்க வைக்க உள்ளதாக இயக்குனர் தெரிவித்தார். ஆனால் தானும் சந்தானமும் இணைந்து நடித்த படங்கள் ஏற்கனவே வரவேற்பு பெற்றுள்ளது. திடீரென்று காம்பினேஷனை மாற்றினால் சரியாக இருக்காது என்று சிம்பு கூறினார்.
அதற்கு பாண்டிராஜ், ‘நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இப்படத்துக்கான காமெடி காட்சிகளை சூரியை மனதில் வைத்துத்தான் எழுதி இருக்கிறேன். சந்தானத்துக்கு அது பொருந்திவராது. நீங்களும் சூரியும் இணைந்தால் அது புதிய ஜோடியாக தெரியும். வரவேற்பும் இருக்கும்‘ என்றார். நீண்ட நேர வாக்குவாதத்துக்கு பிறகு சூரியுடன் நடிக்க சிம்பு ஓ.கே. சொன்னாராம்..::

Comments
Post a Comment