’ஆப்பிள் ஐ ட்யூன்ஸி’ல் இடம் பிடித்த முதல் தமிழ் படம்!!!

1st of February 2014
சென்னை::ஒரு சில திறமையான இயக்குனர்களின் படைப்புத் திறனால் இன்று இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் தமிழ் சினிமா பேசப்பட்டு வருகிறது, வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் ஆப்பிள் ஐ ட்யூன்ஸில் ‘பீட்சா’ திரைப்படம் இடம் பெற்றிருப்பது!

இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் ஆப்பிள் ஐ ட்யூன் ஸ்டோரில் இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கில சப்- டைட்டிலுடன் 5.1 சரவுண்ட் சவுண்டுடன் இப்படத்தை ஆப்பிள் டிவி, ஐ பாட், லாப்டாப் முதலானவற்றில் ரசிகர்கள் கண்டு மகிழலாம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்திருந்த ‘பீட்சா’ படத்தை வட அமெரிக்காவில் பிரைம் நிறுவனத்தார் விநியோகம் செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது! ::
tamil matrimony_HOME_468x60.gif 

Comments