அஜீத்துக்கு சிபாரிசு செய்த ரஜினி!!!

5th of February 2014
சென்னை::கோச்சடையான் படத்தை முடித்து விட்ட ரஜினி, அதற்கடுத்து கே.எஸ்.ரவிக்குமார், கே.வி.ஆனந்த் போன்றவர்களின் படங்களில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், பின்னர் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் அந்த செய்தி குறித்து மறுப்பு செய்தி வெளியிட்டு விட்டனர். அதனால், அடுத்தபடியாக ஐ படத்தை இயக்கியுள்ள பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்தான் ரஜினி நடிப்பார் என்றொரு செய்தி உலவத் தொடங்கியது.

மேலும், ஏப்ரல் மாதம் கோச்சடையான் படமும் ரிலீசாவதோடு, ஐ படமும் விரைவில் ரிலீசாகயிருப்பதால், இந்த யூகங்கள் கிட்டத்தட்ட உண்மையாகி விடுவது போன்ற சூழலும் நிலவியது. அதற்கேற்ப, சிவாஜி, எந்திரனுக்குப்பிறகு ரஜினிக்காக ஒரு மாறுபட்ட கதையை உருவாக்கிய ஷங்கர், சமீபத்தில் அதை ரஜினியை சந்தித்து சொன்னாராம்.

அந்த கதையை ஆர்வமுடன் கேட்ட ரஜினி, என்னென்ன டெக்னாலஜியை பயன்படுத்தப்போகிறீர்கள் என்றெல்லாம் விசாரித்திருக்கிறார். ஆனால், கடைசியில், இந்த கதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? என்று ஷங்கர் கேட்டதற்கு, கதை நன்றாக உள்ளது. ஆனால் எனக்குத்தான் செட்டாகுமா? என்பது சந்தேகமாக உள்ளது என்று இழுத்தாராம்.

அதோடு, இந்த கதையில் என்னை விட அஜீத் நடித்தால் இன்றைய சூழலில் பிரமாதமாக இருக்கும் என்று தனது கருத்தை சொல்லியிருக்கிறார். மேலும், இந்த கதையைப்பற்றி அஜீத்தையும் தொடர்பு கொண்டு கூறியிருக்கிறார் ரஜினி. அதையடுத்து அஜீத், ஷங்கரை தொடர்பு கொள்ள பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாம். அதனால் ஐ படத்தின் ரிலீசுக்குப்பிறகு இதுபற்றிய தகவல் வெளியிடப்படும்
என்று தெரிகிறது.....           
tamil matrimony_HOME_468x60.gif

Comments