1st of February 2014
சென்னை::வல்லவன்' படத்தில் இணைந்து நடித்த சிம்பு-நயன்தாரா ஜோடி நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சிம்புவின் தம்பி குரளரசன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் கதை, சிம்பு - நயன்தாராவின் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால், இதை மறுத்துள்ள இயக்குநர் பாண்டிராஜ், "சிம்பு, நயன்தாரா காதல் கதை அல்ல இது. இதில் சிம்பு காதல் தோல்வியடைந்த இளைஞனாகவும், நயன் தாரா, சிம்பு குடும்பத்தார் பார்க்கும் மணப் பெண்ணாகவும் நடிக்கிறார்கள். இவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு விடும். பிறகு, இருவருக்கும் இடையே எப்படி காதல் தோன்றுகிறது என்பதுதான் இப்படத்தின் கதை." என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், இப்படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று படக்குழுவினர் குழம்பி வருகிறார்களாம். கதவை திற காதல் வரட்டும், லவ்வுனா லவ்வு அப்படி ஒரு லவ்வு ஆகிய தலைப்புகளை பரிசீலித்து வரும் இயக்குநர் பாண்டிராஜ், தற்போது 'இது நம்ம ஆளு' என்ற தலைப்பை தேர்வு செய்து வைத்துள்ளாராம்.::

Comments
Post a Comment