18th of February 2014
சென்னை::மேலே சொல்லியிருப்பது உண்மையான விஷயம் தான்.. சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து ஐந்து படங்களை, அதிலும் 809 நாட்கள் ஓடிய எவர்கிரீன் பிளாக் பஸ்டர் ‘சந்திரமுகி’யை இயக்கிவரின் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க சம்மதித்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது..? இப்படத்தின் கதையை கேட்ட ஐஸ்வர்யா ராய் பி.வாசுவிடம் சொன்ன முதல் வார்த்தை ‘வாவ்’ ..
படத்தின் பெயரும் சிம்புதேவன் பட டைட்டில் பொல கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.. ‘ஐஸ்வர்யா ராயும் ஆயிரம் காக்காவும்’.. நம்புங்கள் இதுதான் படத்தின் இப்போதைய டைட்டில்.. ஒரு வேளை பின்னாடி மாறலாம்.
இந்த கதையை பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக உருவாக்கவிருக்கிறார் பி.வாசு. பல முன்னணி விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனங்களுடன் இப்படத்திற்கான அதிகப்படியான அனிமேஷன் காட்சிகளை உருவாக்க தேர்வு செய்யப்பட உள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அனிமேட்ரானிக்ஸ் நிபுணர்கள் இப்படத்திற்காக பிரத்தியேகப் பணியாற்ற உள்ளனர்.
படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் உள்ளதால் ஐஸ்வர்யா ராய் இப்படத்திற்காக சிறப்புப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளார். இந்தியத் திரையுலகத்தைச் சேர்ந்த சிறந்த மற்றும் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இசையமைப்பாளராக, ஒளிப்பதிவாளராக, படத்தொகுப்பாளராக, கலை இயக்குனராக, சண்டைப் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளனர்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தில். ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.::
Comments
Post a Comment