10th of February 2014
சென்னை::கோச்சடையான்' படத்தின் ரிலீஸ் குறித்து பல்வேறு வதந்திகளும், சர்ச்சைகளும் வெளியாகிக்கொண்டிருந்தது. இந்நிலையில் படம் ஒரு வழியாக ஏப்ரல் 11–ந்தேதி ரிலீசாகும் என்று கடந்த வாரம் அதகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
சென்னை::கோச்சடையான்' படத்தின் ரிலீஸ் குறித்து பல்வேறு வதந்திகளும், சர்ச்சைகளும் வெளியாகிக்கொண்டிருந்தது. இந்நிலையில் படம் ஒரு வழியாக ஏப்ரல் 11–ந்தேதி ரிலீசாகும் என்று கடந்த வாரம் அதகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஆனால், அன்றைய தினமே பட ஆடியோ ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு
வெளியாகததால் ரஜினி ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். ஏற்கெனவே,
கோச்சடையான் படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டும் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் மொத்த பாடல்கள் இன்னும்
வெளியாகவில்லை.
இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை குறித்து விட்டதால், படத்தின் ஆடியோவை
உடனே வெளியிட வேண்டும் என்று அதற்கும் தேதி குறித்து விட்டார்கள்.
லேட்டஸ்ட் தகவலின் படி ‘ ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ வருகிற 28-ஆம் தேதி
வெளியாக இருக்கிறது. சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் இதற்கான விழா
நடைபெறவிருக்கிறது.
உலக தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் கோச்சடையான் படத்தை ரஜினின் இளையமகள், செளந்தர்யா அஸ்வின், இயக்கியுள்ளார். ஹாலிவுட் படம் அவதார் பாணியில், உருவாகியிருக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் சரத்குமார், ஆதி, நாசர், சோபனா, ருக்மணி என்று முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ஈராஸ் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் குளோபல் ஒன் மீடியா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.::
Comments
Post a Comment