6th of February 2014
சென்னை::கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு ஆகி விட்டார் இளம் ஹீரோவான விஜய் சேதுபதி
அவர் செலெக்ட் செய்யும் படங்கள் மட்டுமல்லாது, தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தும் கூட அவரின் எளிமை இப்போதும் திரையுலகினரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
தன்னை வைத்து படமெடுக்க வரும் எந்த டைரக்டராக இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு நல்ல கதைகளை கேட்டு படங்களை தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகிறார்.
அந்த வகையில் புரொடக்ஷன் மேனேஜர் மற்றும் ரம்யா நம்பீசன், பாவனா உட்பட சில நடிகைகளுக்கு ஆர்ட்டிஸ்ட் மேனேஜராகவும் இருந்த பாலகிருஷ்ணனுக்காக ரம்மி என்ற படத்தில் நடிக்க ஓ.கே சொன்னார்.
அந்தப் படத்தில் உண்மையான ஹீரோ இனிகோ தான். அவருக்காகவும், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஸ்க்காகவும் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார் விஜய் சேதுபதி.
எப்படி குசேலன் படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்தாரோ? அதேபோல ஒரு கேரக்டரில் தான் விஜய் சேதுபதி இந்தப்படத்தில் வந்து போகிறார்.
ஆனால் ரம்மி தயாரிப்பாளரோ இது விஜய் சேதுபதியின் படம் தான் என்று ரசிகர்களை நம்ப வைக்கும் விதமாக அவருடைய போட்டோக்களை மட்டுமே போட்டு அந்தப்படத்துக்கு பப்ளிசிட்டி செய்து வருகிறார்.
இதனால் விஜய் சேதுபதிக்காகப் போகும் ரசிகர்கள் படத்தில் அவரின் போர்சன்கள் குறைவாக இருப்பதைக் கண்டு கடுப்பாகி பாதியிலேயே வெளியில் வந்து விடுகிறார்களாம்.
இந்த விஷயங்கள் எல்லாமே விஜய் சேதுபதியின் காதுகளை எட்ட அவரோ நான் அப்பவே சொன்னேன் பாஸூ…இது என்னோட படம் கிடையாது. அதனால போஸ்டர் பப்ளிசிட்டியில என்னை போகஸ் பண்ண வேண்டாம்னு சொன்னேன். ஆனா டைரக்டரும், புரொடியூசரும் கேட்கல.
இது எவ்வளவு பெரிய தப்பு. ரசிகர்களை ஏமாத்த எனக்கும் பிடிக்கல தான். ஆனா என் பேச்சைக் கேட்காம இதெல்லாம் பிஸினஸ் ட்ரிக்ஸ்ன்னு என்னை வைத்து பப்ளிசிட்டி பண்றாங்க. இப்படி பண்ணினா எப்படி ரம்மி படம் ஓடும் என்று தன் சகாக்களிடம் சொல்லி வருத்தப்படுகிறாராம்.
குசேலன் தோல்வியைப் பார்த்த பிறகும் கூட ஜே.எஸ்.கே மாதிரியான நல்ல தயாரிப்பாளர்கள் ரசிகர்களை தவறாக வழி நடத்தலாமா..?
இதற்கிடையே ரம்மி படத்தின் முதல்பாகத்தின் நீளத்தை 10 நிமிடங்கள் குறைத்திருக்கிறார்களாம். அப்படியாவது ரசிகர்கள் பார்த்தா சந்தோஷம் தான்.
Comments
Post a Comment