ஹேப்பி பர்த்டே அபிஷேக் பச்சன்!!!

5th of February 2014
சென்னை::இந்திய சூப்பர்ஸ்டார் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமிதாப் பச்சனின் வாரிசு. பாலிவுட் சினிமாவின் தவிர்க்கமுடியாத நட்சத்திரம். வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்துவிடுவதை தவறாமல் கடைபிடிக்கும் இவர் ஆக்‌ஷன், காமெடி என எல்லா ஏரியாவுக்கும் செட்டாகும் நடிகர்.

மிகுந்த போட்டிகளுக்கிடையே உலக அழகி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்ததன் மூலம் இவர்மீது அதிகப்படியான வெளிச்சம் பாய்ந்தது உண்மை.
 
மணிரத்னம் புண்ணியத்தால் தமிழில் மொழிமாற்றமான ‘குரு’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்,
 

தற்போது ‘ஹேப்பி நியூ இயர்’, ‘ஆல் இஸ் வெல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் அபிஷேக் பச்சனுக்கு  நமது பூந்தளிர் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது......          
tamil matrimony_HOME_468x60.gif

Comments